புலம்பற் காவியம்:
புலம்புகிறேன்...
புலம்புகிறேன்...
என்னை புதைத்த இடத்தில் இருந்து... நீயோ
பூ அலங்காரத்தில் புன்னைகை செய்கிறாய்...
ஏழை நான்!!! வரதட்சனை கேட்டேனா?.
ஏழை நான்!!! வரதட்சனை கேட்டேனா?.
உன்னை மட்டும் தானே கேட்டேன்.
உன் தகப்பன் ஒரு பணக்காரனை
உனக்காக வரதட்சனை கொடுத்து வாங்கினானே
அவன் மணமகனா? விலைமகனா?
உனக்கு இன்று முதலிரவு !!!
எனக்கு இன்று முதல்... இரவு மட்டும் தான்.
என் இறுதி சடங்கின் ஒப்பனைக்காக
இத்தனை மலர் வளையங்களா?
நீ ஒருத்தி வந்திருதால் போதுமே!
நான் இறந்த செய்தி அறிந்தால்
ஓடி வந்து ஒப்பாரி வைப்பாயா?
சல்லாப கட்டிலில் சரசம் பாடுகிறாயே.
சுடுகாட்டு தொட்டிலில் எனக்கு பாடும் இரங்கற்பா
இப்போது உனக்கு கேட்கவா போகிறது.
என் புலம்பலை கேட்க இங்கு யாரும் இல்லை!
ஒரு காகிதமும் எழுதுகோலும் பிணப்பேழைக்குள் வைத்திருந்தால்
என் ஆரிடரை எழுதி தீர்த்திருப்பேன்!
சுமை கூடும் என்று அதை வைக்கவில்லை போலும்.
என் உள்ளச்சுமையை குறைக்க பாடுபடுகிறேன்
சுமை கூடும் என்று அதை வைக்கவில்லை போலும்.
என் உள்ளச்சுமையை குறைக்க பாடுபடுகிறேன்
அதனால் பாடுகிறேன் இந்த புலம்பற் காவியம்.